tamilnewsline

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் சத்ரான் காலமானார்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் சத்ரான் (Shapoor Zadran), தனது 38ஆவது வயதில் காலமானார்.

‘அப்லாஸ்டிக் அனீமியா’ என்ற அரிய வகை இரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டு, இந்தியாவில் உள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆப்கானிஸ்தான் அணி தடம் பதித்த ஆரம்ப காலகட்டத்தில், அந்த அணியின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட முக்கிய தூண்களில் ஒருவராக இவர் திகழ்ந்தார்.

2009 முதல் 2020 வரையான காலப்பகுதியில் ஆப்கானிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடியுள்ள ஷாபூர் சத்ரான், 44 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 43 விக்கெட்டுகளையும், 36 இருபதுக்கு 20 போட்டிகளில் 37 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில், இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை, நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவை மற்றும் சாதனைகள் வரலாற்றில் என்றும் மறக்க முடியாதவை என புகழாரம் சூட்டியுள்ளது.

Exit mobile version