43 ஆண்டுகளாக ஆறாத காயம் – நாடாளுமன்றத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி

5 hours ago
Sri Lanka
(5 views)
aivarree.com

ஈழத் தமிழ் மக்களின் வாழ்வை அடியோடு மாற்றிப்போட்ட கோரச் சம்பவமான கருப்பு ஜூலையின் 43வது ஆண்டு நினைவு தினம், இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மிகுந்த மனவேதனையுடன் நினைவுகூரப்பட்டது.

கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருந்த போதிலும், 1983 ஜூலையில் சிந்தப்பட்ட தமிழர்களின் இரத்தமும், எரிக்கப்பட்ட சாம்பலின் சாட்சியங்களும் இன்றும் ஆறாத வடுவாகவே நீடிக்கின்றன.

அன்று நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், சொத்து அழிப்புகள் மற்றும் படுகொலைகள் என்பன தமிழ் சமூகத்தின் மீதான வடுக்களாக இன்றும் தொடர்கின்றன.

இத்தகைய கசப்பான வரலாற்றுச் சம்பவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வும், நீதியும் வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் வேண்டுகோளாகவும் உள்ளது.