Aivarree

70 பேருடன் இயந்திர மூடி இன்றி பறந்த விமானம்

இந்தியாவில் மும்பைக்கும் – குஜராத்துக்கும் இடையிலான சேவையில் ஈடுபடும் விமானம் ஒன்று, அதன் இயந்திரம் மூடப்படாமல் பயணித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த விமானம் 70 பயணிகளுடன் மும்பையில் புறப்பட ஆயத்தமான போது, அதன் முன்பக்க இயந்திரத்தின் மூடி கழன்று விழுந்துள்ளது.

இதனை பெரிதுபடுத்தாத விமானி அதனை குஜராத் நோக்கி செலுத்தி பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார்.

இதுதொடர்பாக இந்திய விமானசேவைகள் அதிகாரசபை விசாரணைகளை நடத்தி வருகிறது.

விமானத்தின் முன்பக்க மூடி இல்லை என்பது, விமானத்தின் வேகத்தில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், விமான இயந்திரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

Exit mobile version