Aivarree

5ம் தர புலமைப் பரிசில் பெறுபேறு | வெளியாகாமைக்கான காரணம் இதோ

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் சனிக்கிழமை இரவுக்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான அறிவுறுத்தலை தாம் அதிகாரிகளுக்கு விடுத்திருப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், வார இறுதி நாளில் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர்களும் முக்கிய அதிகாரிகளும் விடுமுறையில் இருந்தமையால் பெறுபேற்றை வெளியிட முடியாமல் போனதாக தெரியவந்துள்ளது.

இந்த பெறுபேறுகளை உடனடியாக வெளியிடுமாறு சனிக்கிழமை காலையிலேயே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்ட போதும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் படைத்த அதிகாரிகள் யாரும் அங்கு இருக்கவில்லை.

எவ்வாறாயினும், பெறுபேறுகள் ஞாயிற்றுக் கிழமை(13) வெளியிடப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருப்பதாக பரீட்சைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தார்.

Exit mobile version