Aivarree

5ஆம் ஆண்டு புலமை பரிசில்/ இன்று பெறுபேறு வருகிறதா?

5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.

அதன் பெறுபேறு எதிர்வரும் நாட்களில் வெளியாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

இதன்படி திங்கட்கிழமை இந்த பெறுபேறுகள் வெளியாகும் என்று சமூகவலைதளங்களில் தகவல் பரவியுள்ளது.

இது குறித்து பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பிரணவதாசனை அய்வரி செய்திகள் குழு தொடர்பு கொண்டு வினவியது.

இதற்கு, 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பெறுபேறுகள் விரைவில் வெளியாக்கப்படும் என்றும், திங்களன்று வெளியாவதற்கான அறிவிப்பு எதனையும் விடுவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version