tamilnewsline

4ஆம் நாள் / உக்ரைனில் என்ன நடக்கிறது / 10 முக்கிய தகவல்கள்

உக்ரைனில் யுத்தம் நான்காம் நாளாகவும் நீடிக்கும் நிலையில், அங்கு இதுவரையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளின் செய்தி தொகுப்பு.

  1.  
    கியவுக்கு அருகில் உள்ள வசில்கிவ் எண்ணெய் உலை தாக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து விசவாயு கசிவு ஏற்பட்டுள்ளது – பொதுமக்கள் தங்களது யன்னல் கதவுகளை மூடி வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  2. இதுவரையில் 240 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது.

  3. திங்கள் அதிகாலை வரையில் கியவில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள நிலையில், வீதியில் நடமாடும் யாராக இருந்தாலும் அவர்கள் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களாகவே பார்க்கப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

  4. தலைநகர் கியவில் இரவில் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற எச்சரிக்கையில் மக்கள் பங்கர்கள் அமைத்து தங்க ஆரம்பித்துள்ளனர்.

  5. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுயவிருப்பத்துடன் சண்டையில் ஈடுபடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.

  6. மேற்கத்தய நாடுகள் பல உக்ரைனுக்கு ஆயுத மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்கான உறுதிமொழிகளை வழங்கியுள்ளன – ஆனால் இன்னும் போதியளவு ஆயுதங்கள் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. 

  7. உக்ரைனில் இருந்து, எல்லையுடன் ஒட்டியுள்ள போலாந்து மற்றும் மொல்டோவா போன்ற நாடுகளுக்கு பாரிய எண்ணிக்கையான உக்ரைன் மக்கள் இடம்பெயர்கின்றனர். 

  8. ரஷ்யாவின் மத்திய வங்கி உள்ளிட்ட பல வங்கிகளின் சர்வதேச தொடர்பைத் துண்டிக்கும் வகையிலான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.

  9. உக்ரைனில் உள்ள இந்தியர்களுடன், 3 விமானங்கள் இதுவரையில் இந்தியாவிற்குச் சென்றுள்ளன. 
  10. கியவ் மற்றம் ஒடெசாவில் தாக்குதல் நடத்தி உக்ரைன் மையப்பகுதியை முடக்கும் ரஷ்ய படையின் திட்டத்தை முறியடித்ததாக உக்ரைன் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

உடனடி தகவல்களை வட்சப்பில் பெற்றுக் கொள்ள கீழுள்ள ஐ அழுத்து எமது வட்சப் குழுவில் இணையுங்கள்.

Exit mobile version