கொவிட் தடுப்பூசியின் 4 ஆவது செலுத்துகையை (டோஸ்) பரிந்துரைக்கப்பட்ட நாடுகளுக்குச் செல்ல விரும்புபவர்கள், அதனை இலங்கையில் பெற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவான்துடாவ இதனைத் தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசியின் 4 ஆவது செலுத்துகையை வழங்க சுகாதார அமைச்சு இன்னும் முடிவு செய்யவில்லை.
இதன்படி, வெளிநாடு செல்ல 4வது செலுத்துகை தேவைப்படுமாயின், வெளிநாடு சென்ற பின்னர் குறித்த நாட்டின் நடைமுறைகளுக்கு அமைய அங்கேயே பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
