3 மாதங்களுக்கு மின்சாரம் துண்டிக்க அனுமதி கேட்டது CEB

4 years ago
Sri Lanka
(156 views)
aivarree.com

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்சாரத்தை (கட்டம் கட்டமாக) துண்டிக்க இலங்கை மின்சார சபை (CEB) அனுமதி கோரியுள்ளது.

ஆனால் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

மின்சார நெருக்கடி தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபை அதிகாரிகளுக்கு இடையில் சனிக்கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதன் முடிவுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு வெளியிடப்படும் எனவும் ரத்நாயக்க தெரிவித்தார்.