Aivarree

3ல்2 பெரும்பான்மையை இழக்கும் அரசாங்கம்?

PMD

அரசாங்கத்திலுள்ள 15க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் எழுப்புகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத சூழ்நிலையில், அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக அறியமுடிகிறது.

அவர்கள் அவ்வாறு செயற்படுவார்களாக இருந்தால் அரசாங்கத்துக்கு தற்போது இருக்கின்ற 3ல்2 பெரும்பான்மை பலம் அற்றுப் போகும்.

இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் அவர்கள் எதிரணியில் சென்றிணைவது குறித்த எந்த தீர்மானத்தையும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை.

Exit mobile version