Aivarree

22ஆம் திகதியுடன் மதுபான உற்பத்தி நிறுத்தம் என்பது உண்மையா?

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக இம்மாதம் 22ஆம் திகதிக்கு பின்னர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எத்தனோல் தட்டுப்பாடு காரணமாக இம்மாதம் 22ஆம் திகதி முதல் மதுபான உற்பத்தி நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தத் தகவல்களில் உண்மையில்லை என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான தவறான தகவல்களால் சட்டவிரோதமாக மதுபானங்களை சேகரிப்பதற்கும் மதுபான தொழிற்சாலை உரிமையாளர்கள் மத்தியில் நெறிமுறையற்ற சந்தைப்படுத்தல் உத்திகள் பின்பற்றப்படுவதற்கும் வழிவகுக்கும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

உரிமம் பெற்ற 23 மதுபான ஆலைகள் உள்நாட்டில் இயங்குவதுடன் அவற்றுக்கு தேவையான எத்தனோல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் உள்ளூர் சந்தையில் கிடைக்கப்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please join us on our WhatsApp Group >> https://chat.whatsapp.com/IqncDmlUVS5Cho5nTydnMF

Exit mobile version