2026 உலகக் கிண்ணத்தில் தமது முதலாவது கோலை போட்டார் ரொனால்டோ

3 months ago
tamilnewsline.com


உலகப் புகழ்பெற்ற காற்பந்தாட்ட வீரர் க்றிஸ்டியானோ ரொனால்டோ, 2026ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண காற்பந்தாட்டத் தொடரில் தமது முதலாவது கோலை பதிவு செய்தார்.
போர்ச்சுகல் அணிக்கும் உஸ்பெகிஸ்தான் அணிக்கும் இடையிலான நொக்கவுட் சுற்று தற்போது இடம்பெறுகிறது.
இந்தபோட்டியில் ரொனால்டோ தமது முதலாவது கோலை பகுதி செய்ததுடன், சில நிமிடங்களிலேயே இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.
இந்த கோல்கள் மூலம் ஆறு உலகக்கிண்ண தொடர்களில் கோல் அடித்த முதலாவது வீரர் என்ற சாதனையையும் ரொனால்டோ தமதாக்கினார்.
இந்த தொடரின் முதல் போட்டியில் போர்ச்சுகல், கொங்கோ நாட்டுடன் மோதி போட்டியை சமநிலையில் நிறைவு செய்தது.
அந்த போட்டியில் ரொனால்டோ கோல்கள் எதனையும் பெற்றிருக்கவில்லை என்ற நிலையில் அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.