2026 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை 9 விக்கெட்டு வெற்றி – சமரி அதபத்து அதிரடி சதம்

4 hours ago
SPORTS
(5 views)
aivarree.com

2026 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பிரிஸ்டலில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த இலக்கைத் துரத்திய இலங்கை மகளிர் அணி, 15.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்தது.

இலங்கை இன்னிங்சை வழிநடத்திய அணித்தலைவி சமரி அதபத்து, 106 ஓட்டங்களை அவுட் ஆகாமல் (நாட் அவுட்) குவித்து அதிரடிக் காட்டினார். அவரது இன்னிங்சில் 17 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும்.

இதன்மூலம், சமரி அதபத்து போட்டியின் ஆட்டநாயகி விருதையும் தட்டிச் சென்றார்.