2 மணிக்குப் பின்னர் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

4 years ago
Sri Lanka
(81 views)
aivarree.com

சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் பல இடங்களில் வியாழக்கிழமை பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக காற்று மற்றும் மின்னல் ஏற்படக்கூடும்.

எனவே அனர்த்தங்களை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.