tamilnewsline

வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து 15 இந்தியர்கள் உயிரிழப்பு

வியட்நாமின் பு குவோக் தீவு அருகே 32 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 பணியாளர்களுடன் சென்ற அதிவேகப் படகு ஒன்று கடல் கொந்தளிப்பு காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்து நிகழ்ந்த இடத்தை அடுத்துள்ள கடற்கரையில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்துக்குள்ளானவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Exit mobile version