Aivarree

16ம் நாள் யுத்தம் | ரஷ்யா – உக்ரைன் | முக்கிய செய்திகளின் சுருக்கம்

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான யுத்தம் 16ம் நாளை எட்டியுள்ளது.

இறுதியாகப் பதிவான 10 செய்திகளின் சுருக்கத்தைத் தருகிறோம்.


  1. ரஷ்யாவின் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் தலைநகரை நோக்கி 3 கிலோமீற்றர் தொலைவுக்கு நகர்ந்துள்ளனர். 
  1. ரஷ்யா உக்ரைனின் 5 நகரங்களில் யுத்த நிறுத்தத்தை அறிவித்து, மனிதாபிமான தாழ்வாரங்களை (corridors) வெள்ளிக்கிழமை வழங்கவுள்ளது.
  2. உக்ரைன் மரியூபோல் நகரில் உணவு மற்றும் நீருக்கான பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. 
  3. செர்னொபில் அணு மின்னுற்பத்தி நிலையத்தின் அனைத்து தொடர்புகளையும் இழந்துவிட்டதாக உக்ரைன் ஐக்கிய நாடுகளின் அணு கண்காணிப்புக் குழுவிடம் தெரிவித்துள்ளது. 
  4. உக்ரைனிலிருந்து 400,000க்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
  5. மரியூபோல் நகரில் ஒவ்வொரு 30 நிமிட இடைவெளியிலும் கடுமையான குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
  6. கியவ் நகருக்கு வெளியில் சுமார் 64 கிலோமீற்றர் நீளத்துக்கு நிலைகொண்டிருந்த ரஷ்யா இராணுவ படையினர் தற்போது முறிவடைந்துள்ளனர் – சில வாகனங்கள் வனப்பகுதிகளுக்குள் சென்றிருப்பதாக செய்மதி படங்கள் தெளிவுபடுத்துகின்றன. 
  7. மொஸ்கோ உக்ரைனில் உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது  – இதுகுறித்து ஆராய ரஷ்யாவின் விருப்பத்தின் பேரில் பாதுகாப்புச் சபை கூடுகிறது. 
  8. உக்ரைன் – கார்கிவ் நகரில் அமைந்துள்ள கதிரியக்க சோதனை கூடம் ஒன்றின் மீது ரஷ்யா ஷெல் வீச்சுகளை நடத்தியுள்ளதாக உக்ரைன் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது. 
  9. ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு தொண்டு அமைப்புகள் உக்ரைனில் மேலதிக பணியாளர்களை ஈடுபடுத்தி நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் வட்சப்பில் பெற்றுக் கொள்ளக் கீழுள்ள Linkஐ அழுத்தி எமது வட்சப் குழுவில் இணையுங்கள்.

Exit mobile version