tamilnewsline

14 பட்டதாரி பெண்களைத் திருமணம் செய்த நபர் – இந்தியாவில் கைது

இந்தியாவின் 7 மாநிலங்களில் 14 பட்டதாரி பெண்களை திருமணம் செய்த நபர் ஒருவர் ஒடிசா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாம் ஒரு வைத்தியர் என்று தெரிவித்து, 7 மாநிலங்களைச் சேர்ந்த 14 பெண்களையும், மற்றப் பெண்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்துள்ளார்.

அவர் இறுதியாக திருமணம் முடித்த டெல்லி பள்ளி ஆசிரியர் ஒருவர் சந்தேகத்தில் செய்த முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

48 வயதான அவர் திருமணம் செய்து கொண்ட பெண்கள் அனைவரும் பட்டதாரிகளாகவும், பெரிய உத்தியோகத்தில் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.

இணையத்தளம் ஊடாக அவர்களைத் தெரிவு செய்து, அவர்களிடம் இருந்து பெருந்தொகை பணத்தையும் அவர் அபகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version