14 எம்.பி. களுக்கு கொவிட் – பாராளுமன்ற அமர்வை குறைக்க ஆய்வு

முடக்கப்பட்டிருந்த பாராளுமன்ற அமர்வு கடந்த ஜனவரி 18ம் திகதி மீள ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின்னர் இதுவரையில் 14 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், 50க்கும் மேற்பட்ட பாராளுமன்ற அலுவலர்களுக்கும் கொவிட் தொற்றியுள்ளது. இந்தநிலையில் பாராளுமன்ற அமர்வு நாட்களை குறைப்பது குறித்து ஆராயப்படுகிறது. இதுதொடர்பான தீர்மானம் நாளையதினம் 3 மணிக்கு பாராளுமன்ற விவகாரங்கள் குழுவினால் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தவாரம் 8ம் திகதி முதல் 11ம் திகதி வரையில் பாராளுமன்ற அமர்வினை நடத்துவதற்கு உத்திதேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.