tamilnewsline

135 இந்தியப் படகுகள் ஏலத்தில் விற்பனை

யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 135 இந்தியப் படகுகள் இன்றைய தினம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

இதன்போது 48அடி நீளமான மீன்பிடிப் படகொன்று அதிக தொகையாக 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள தலைமையக அதிகாரிகள் ஏல விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இலங்கையின் 5 துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீன்பிடிப் படகுகள் திங்கள் முதல் 5 இடங்களில் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.

Exit mobile version