Aivarree

100mm பலத்த மழை / வளிமண்டலவியல் மையம் எச்சரிக்கை

File_Photo

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக் கூடும்.

வளிமண்டலவியல் திணக்களத்தின் அறிக்கையின் படி, வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் சனிக்கிழமை (19) அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Exit mobile version