Aivarree

01-02-2022 – 06.30 / உக்ரைன் – ரஷ்யா விவகாரம் / இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள்

இற்றைப்படுத்தப்பட்ட உக்ரைன் – ரஷ்ய விவகாரம் குறித்த செய்தித்துளிகள்

1) உக்ரைன் அணுவாயுத தாக்குதல் நடத்தக் கூடும் எனவும், அது தங்களுக்கு ஆபத்தானது எனவும் ரஷ்யா அச்சம் வெளியிட்டுள்ளது.

2) ரஷ்யா இரண்டாவது தடவையாகவும் கார்க்கிவ்வில் ஆர்ட்லறி தாக்குதல் நடத்தியுள்ளது. – இதில் 10 பேர் பலியாகினர் – 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

3) ரஷ்யாவின் ஆட்லறி தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மாணவரின் தந்தையுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாடியுள்ளார்.

4) ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு உக்ரைன் பிரதமர் ஏற்கனவே கோரி இருந்தார். – இன்று அவர் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றில் தொலைகாணொளி மூலம் உரையாற்றினார்.

5) ரஷ்யாவை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இருந்து வெளியேற்றுமாறு பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது.

6) உக்ரைன் எல்லையில் பலாரஸ் பெரும் படையை திரட்டி இருப்பதாக உக்ரைன் குற்றம் சுமத்துகிறது.

7) ரஷ்யாவின் தாக்குதல் அச்சத்தால், உக்ரைன் மக்கள், இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட பங்கர்களில் தங்கியுள்ளனர்.

8) பொருட்களை இடம் நகர்த்துதல் உள்ளிட்ட சிக்கல்களால், ரஷ்ய படையினரால் கியவ் நோக்கி வேகமாக முன்னேற முடியாதிருப்பதாக பிரித்தானிய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

9) இந்திய பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் விடயம் தொடர்பாக மூன்றாவது உயர் மட்ட சந்திப்பை நடத்துகிறார்.

Exit mobile version