யாழ்ப்பாணத்தில் கடந்த 2 வாரங்களில் ஹெரோயின் பாவித்த 2 இளைஞர்கள் பலியாகினர்.
யாழ்ப்பாணம் – கொழும்புத்துறையைச் சேர்ந்த 28 வயதுடய இளைஞர் ஒருவர் சனிக்கிழமை(19) முற்பகல் வீட்டில் உயிரிழந்தார்.
அவர் கடந்த 4 ஆண்டுகளாக போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
சனிக்கிழமை ஹெரோயின் எடுத்துவிட்டு வீட்டில் நுழைந்த போது, நெஞ்சை பிடித்தவாறு கீழே விழுந்து அவர் உயிரிழந்தார் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட தெல்லிப்பழை – கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கடந்த 4ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
