Aivarree

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் அவர் தாக்கல் செய்திருந்த பிணைகோரிக்கை மனு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

அவருக்கு பிணை வழங்க சட்ட மா அதிபர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதால், அவரை பிணையில் விடுக்க நீதிமன்றம் தீர்மானித்தது.

இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முற்பட்டமைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினால் 2020 ஏப்ரல் 14 கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் 18 மாதங்களின் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டார்.

Exit mobile version