ஹட்டனில் கைதான போலி வைத்தியர் நீதிமன்றில்

4 years ago
Sri Lanka
(76 views)
aivarree.com

ஹட்டன் – கொட்டகலை பகுதியில் மருத்துவ சான்றுகள் இன்றி வைத்தியம் பார்த்துவந்த போலி வைத்தியர் ஒருவர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை செவ்வாய்க்கிழமை ஹட்டன் பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, காவல்துறையினர் Aivarree.com செய்திகளுக்கு தெரிவித்தனர்.

மருந்தகம் ஒன்றில் பணியாற்றும் குறித்த நபர் வீடுவீடாக சென்று மருத்துவ சிகிச்சையையும், மருந்து பொருட்களையும் விநியோகித்து வந்துள்ளார்.

அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் 4 பேர் விசேட அதிரடிப்படையால் கைதாகி இருந்தனர்.

சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல பெற்றுக்கொள்ள, எமது வட்சப் குழுவில் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/DzIgQk7SDjJJVFUqb6BU8w