Aivarree

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் பிஎஸ்எல்வி சி52

File_Photo

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி52 ரொக்கெட்டை திங்கள் அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

இதன் மூலம் ஈஓஎஸ்-04 என்ற செயற்கைக்கோளும், இன்ஸ்பயர் செட்-1 மற்றும் ஐ.என்.எஸ்-2டிடி என்ற 2 சிறிய வகையிலான செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டன.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவன் விண்வெளி தளத்தில் இருந்து இவை செலுத்தப்பட்டன.

விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

புவியை கண்காணிக்கவுள்ள இந்த செயற்கைக்கோள்களின் ஆயுட்காலம் மொத்தம் 10 ஆண்டுகள் ஆகும்.

Exit mobile version