விரைவில் தேர்தலா? அமைச்சர் பீரிஷ் விளக்கம்

4 years ago
Sri Lanka
(73 views)
aivarree.com

நாட்டில் விரைவில் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல் ஒன்று நடைபெறவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


ஆனால் அதனை அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் முற்றாக நிராகரித்துள்ளதுடன், அரசாங்கத்துக்கு மீதமாக இருக்கின்ற 3 ஆண்டுக் காலத்தைச் சிறப்பாகப் பயன்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் கூறியுள்ளார். 


அதேநேரம் அரசாங்கத்திலிருந்து கொண்டே அரசாங்கத்தை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. 


குறைபாடுகள் இருப்பின் அரசாங்க கூட்டங்களில் வைத்து அதனை எழுப்ப வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.