யாழில் விபத்து – ஒருவர் பலி

5 years ago
tamilnewsline.com

காங்கேசந்துறை, வறுத்தலைவிளான் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளவாலை, உயரப்புலத்தை சேர்ந்த சசிக்குமார் லிசான் (18) என்பவரே உயிரிழந்தார்.

இதேவேளை படுகாயமடைந்த மற்றுமொரு இளைஞர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Reported by
Editorial Reporter