வாகன இறக்குமதியை அனுமதிப்பதா? / மத்திய வங்கி ஆளுநர் பதில்

4 years ago
Sri Lanka
(195 views)
aivarree.com

இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடை இரண்டு வருடங்களாக நீடிக்கிறது.

இதனால் உள்நாட்டில் பாவித்த வாகனங்களின் விலைகள் இரட்டிப்பாக அதிகரித்துள்ளன.

அண்மையில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பான ஆயத்த நிலையை வெளிப்படுத்தி இருந்தது.

இது தொடர்பாக ஹிரு தொலைகாட்சி செய்தியில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கருத்து தெரிவிக்கும் போது, IMF செல்வதற்கும் வாகன இறக்குமதிக்கும் தொடர்பில்லை என கூறினார்.

அந்நிய செலாவணி அதிகரித்து, நாட்டின் பொருளாதார நிலைமை சீரடையும் போது, வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.