ரொஷான் மஹாநாம விமான நிலையத்தில் முகம் கொடுத்த நெருக்கடி

4 years ago
SPORTS
(167 views)
aivarree.com

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரொஷான் மஹாநாம, தாம் விமான நிலையத்தில் நெருக்கடிக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் போது விமான நிலையத்தில் தடுப்பூசி அட்டை தொடர்பாக அவர் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளார்.

மூன்று கொவிட் தடுப்பூசிகளையும் போட்டு கொண்டிருந்த போதும், முதலாவது தடுப்பூசியை மாத்திரமே இலங்கை பெற்றார்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் தடுப்பூசிகளை அவர் பிரித்தானியாவிலேயே பெற்றுக் கொண்டார்.

இதன் காரணமாக அவர் சமர்ப்பித்த தடுப்பூசி அட்டையை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளாததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.