tamilnewsline

ரஷ்ய தாய்மார்களிடம் உக்ரைன் விடுத்த கோரிக்கை

ரஷ்யாவின் நூற்றுக்கணக்கான துருப்பினர் உக்ரைன் படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரையும், அவர்களின் தாய்மார்கள் நேரில் வந்து பொறுப்பேற்றுச் செல்லுமாறு உக்ரைன் தாய்மார்களிடம் அறிவித்துள்ளது.

இதுகுறித்த தீர்மானத்தை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டுள்ளது.

யுத்தம் நடைபெறும் போது, கைதாகின்ற எதிரி படை துருப்பினரை விடுவிப்பது அரிதான விடயமாகும்.

எனினும், மொஸ்கோவை ஆத்திரப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

Exit mobile version