ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகர் கியவை நெருங்கியுள்ள நிலையில், தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. இதுவரையான 9 முக்கிய தகவல்கள் வருமாறு.
1) 100,000 உக்ரைன் நாட்டவர்கள் எல்லையைத் தாண்டி போலந்திற்குள் நுழைந்துள்ளனர்.
2) ரஷ்ய படையெடுப்பில் இதுவரையில் 198 உக்ரைன் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
3) உக்ரைனுக்கு 200 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை நெதர்லாந்து வழங்கியுள்ளது – மேலும் ஆயுத உதவிகள் வந்தவண்ணம் உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
4) போரை நிறுத்த புட்டினுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ரஷ்ய மக்களை உக்ரைன் ஜனாதிபதி கோரியுள்ளார்.
5) அமைதி பேச்சுவார்த்தையை நடத்த வேண்டுமாக இருந்தால் ரஷ்யா தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
6) உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக போலந்து மார்ச் 24ஆம் திகதி மொஸ்கோவில் ரஷ்யாவுடன் இடம்பெறவுள்ள 2022 உலகக் கோப்பை பிளே-ஓஃப் போட்டியில் விளையாடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
7) உக்ரைன் மீதான மொஸ்கோவின் தாக்குதலை “தாக்குதல் படையெடுப்பு அல்லது போர்ப் பிரகடனம்” என்று செய்திகளில் கூற வேண்டாம் என ரஷ்யாவின் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டாளர் ஊடகங்களை வலியுறுத்தியுள்ளார்.
8) பொருளாதார தடைகள் காரணமாக பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்வெளி ஏவுகணைகளை ஏவும் நடவடிக்கையை ரஷ்யா நிறுத்தியது.
9) “நான் இங்கே இருக்கிறேன், எந்த ஆயுதத்தையும் கீழே வைக்க மாட்டேன்” என உக்ரைன் ஜனாதிபதி காணொளி ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
இவ்வாறான தகவல்கள் தொகுப்பாக பெற்றுக் கொள்ள எம்முடன் இணைந்திருங்கள். கீழுள்ள LINK ஐ க்ளிக் செய்து எமது வட்சப் குழுவில் இணையுங்கள்.
