ரஷ்யாவிடம் கடன் கேட்கும் இலங்கை

5 years ago
tamilnewsline.com

உலக நாடுகள் ரஷ்யாவை புறக்கணித்து வரும் நிலையில், இலங்கை ரஷ்யாவிடம் இருந்து கடன் கோரியுள்ளது.


நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு என்பவற்றின் கொள்வனவுக்காக 300 மில்லியன் டொலர் கடன் வசதியை வழங்குமாறு இலங்கை கோரி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


உக்ரைனில் தாக்குதல் நடத்துகின்ற நிலையில், ரஷ்யாவை பல்வேறு நாடுகளும் அமைப்புகளும் புறக்கணிக்கின்ற சூழ்நிலையில் இலங்கை இந்த உதவியை கோரி இருக்கிறது.


உலக நாடுகள் மியன்மாரை புறக்கணித்த போதும், அங்கிருந்தும் இலங்கை அரசியை இறக்குமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.