எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப ரயில் பயண கட்டணங்களை உயர்த்துவதற்கு தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அவ்வாறு அதிகரிக்கப்பட்டால் அதற்கு எதிராக பெரும் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக, ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை அடுத்து, ரயில் பயணங்களில் ஈடுபடுகின்ற மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனை பயன்படுத்தி ரயில் திணைக்களத்துக்கான வருமானத்தை அதிகரிப்பதை விடுத்து பயணக் கட்டணத்தை உயர்த்து பயணிகள் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது பிழையானது என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
