Aivarree

ரஞ்சன் ராமநாயக்க விடுதலையாகிறார்?

முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, எதிர்வரும் சுதந்திர தினத்தன்று ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஞ்சன், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் நான்காண்டு கடூழிய சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

அவர் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியிடம் பொதுமன்னிப்புக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அவர் எதிர்வரும் நான்காம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் அவ்வாறான உத்தரவு எதுவும் தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்று, சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

Exit mobile version