யாழ் மீனவர் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை

4 years ago
Sri Lanka
(39 views)
aivarree.com

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – சுப்பர் மடம் பகுதியில் மீனவர்கள் நான்கு தினங்களாகப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.


இந்திய மீனவர்களின் எல்லை மீறல் மற்றும் இந்திய மீனவர்களின் படகு மோதியதில் இரண்டு யாழ் மீனவர்கள் கொல்லப்பட்டமை போன்ற விடயங்களை மையப்படுத்தி இந்த போராட்டம் இடம்பெற்றது.


இதற்குத் தடை விதிக்கக் கோரி பருத்தித்துறை காவல்துறையினர் நீதிமன்றில் பிராது செய்திருந்தனர்.


இதன்படி நீதிமன்றம் கொவிட் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி, இந்த போராட்டத்துக்குத் தடை விதித்துள்ளது.