tamilnewsline

யாரையும் திருப்திப்படுத்த முடியாது – ஜனாதிபதி

FILE PHOTO

நாட்டுக்கு எது முக்கியமோ அதைதான் செய்ய முடியுமே தவிர, அனைவரையும் திருப்திப் படுத்த முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்கள் எந்த விடயத்தையும் நேர்மறையாகச் சிந்திக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் முன்னுதாரணமான செயற்பட வேண்டும், மக்களும் உண்மைகளின் அடிப்படையில் செயற்பட வேண்டும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்பாக அரசியல் ரீதியாக திரிபு படுத்தப்பட்ட கருத்துக்களை வெளியிடுகின்றவர்கள் தொடர்பாக மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்’ என்றார்.

Exit mobile version