Aivarree

மோடிக்கான கடிதம் தயார் | இன்று கைச்சாத்து | மனோகணேசன்

இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு மலையக மக்களது அபிலாசைகளை உள்ளடக்கிய கடிதம் ஒன்றை அனுப்ப முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையில் நடைபெறும் இந்த முயற்சியில், பல்வேறு அமைப்புகளும் பங்குபற்றியுள்ளன.

இந்த கடிதத்தின் தயாரிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை அதில் கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

பின்னர் அந்த கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்தராஜபக்ஷ மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். 

இதனை அடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், பிரித்தானிய அரசாங்கத்துக்கும், தமிழக முதல்வருக்கும் அனுப்பி வைக்கப்படும் எனவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version