மொடர்னா செயலூக்கி மருத்துவ பரிசோதனையில்

5 years ago
tamilnewsline.com

அமெரிக்காவின் மொடர்னா தடுப்பூசி நிறுவனம் ஒமைக்ரொன் வைரஸ் திரிபுக்கு எதிராக செயற்படுவதற்காக தயாரிக்கப்பட்ட செயலூக்கி தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது.

600 பேருக்கு முன்னோடியாக இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 50 சதவீதமானோர் ஏற்கனவே முதல் இரண்டு மொடர்னா தடுப்பூசிகளையும் பெற்றவர்கள்.

வேறு சில தடுப்பூசிகளை பெற்றவர்களும் புதிய செயலூக்கி தடுப்பூசிகளை பெற்றவர்களும் குறித்த 600 பேரில் அடங்குகின்றனர்.

ஒமைக்ரொன் வைரஸ் திரிபுக்கு எதிராக தயாரிக்கப்படுகின்ற இந்த செயலூக்கி தடுப்பூசி குறிப்பாக மூன்றாவது அல்லது நான்காவது தடுப்பூசியாக செலுத்தப்படும்.

Reported by
Editorial Reporter