முகக்கவசங்கள் கட்டாயமில்லாத இலங்கை எப்போது சாத்தியம்? / சுகாதாரத்துறை பதில்

5 years ago
tamilnewsline.com

மூன்றாம் தடுப்பூசியை வழங்கி சகல மக்களினதும் நோய் எதிர்ப்பு மட்டம் எதிர்பார்த்த அளவு அதிகரித்தால் நாடு முழுமையாக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விழாக்களை நடத்துவதற்கும் அனுமதி வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அப்படி ஒரு சூழ்நிலை உருவானால், “முகக்கவசம் அணிய தேவையில்லை” என்ற அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள 14.1 மில்லியன் செயலூக்கி தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறாயின் நாட்டை முழுமையாக திறந்து நாளாந்த செயற்பாடுகளை தங்குதடையின்றி முன்னெடுக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.