tamilnewsline

மின்சார தடை / விசேட அமைச்சரவை கூட்டம்

நாட்டில் மின்சார விநியோக தடை தொடர்பில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன.

இது சம்பந்தமான தீர்க்கமான முடிவுகள் இன்றி பல்வேறு தகவல்கள் நிமிடத்துக்கு நிமிடம் வெளியிடப்பட்டு வரும் நிலையை அவதானிக்க முடிகிறது.

தேவையான அளவுக்கு மின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்கான மூலப்பொருள் தட்டுப்பாடும் நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்றைக் கூட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி செவ்வாய்க்கிழமை(22) ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் கூடி மின்சார விநியோகம் சம்பந்தமான முக்கியமான தீர்மானத்தை எடுக்கவிருப்பதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் அய்வரி செய்திகளுக்குத் தெரிவித்தார்

Exit mobile version