tamilnewsline

மின்சார விநியோகதடை/உரிமை மீறல்/ ரணில்

File Photo

நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகின்ற மின்சார விநியோக தடையை மார்ச் மாதம் 5ம் திகதி வரையில் பிற்போடுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.

தற்போது உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறுவதால், மின்சார விநியோகம் தடை செய்யப்படுவது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும் மின்சார விநியோகத் தடையானது ஒவ்வொரு பிரதேசத்துக்கும் வெவ்வேறு நேரங்களில் அமுலாகிறது.


இதற்கு எதிரான உரிமை மீறல் வழக்கினை தாக்கல் செய்ய மாணவர்களால் முடியும் எனவும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் டினேஸ் குணவர்தன, இந்த விடயம் குறித்து செவ்வாய்க்கிழமை மின்சார சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக குறிப்பிட்டார்.

Exit mobile version