tamilnewsline

மாவை சேனாதிராஜாவுக்கும் கொவிட்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் நொதர்ன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அவருக்கு கொவிட் தொற்றிருப்பது தெரியவந்தாக மாவை, அய்வரி செய்திகளுக்கு உறுதிப்படுத்தினார்.

தமது உடல்நிலையை சற்று பலவீனமாக உணர்வதாகவும், அடுத்ததாக பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version