ராகம மருத்துவ பீட மாணவர் விடுதியில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் நால்வர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதான அவர் நேற்றிரவு ராகம காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.
