Aivarree

மஹான் திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டது

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘மஹான்’.

விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் விக்ரம் ஆகியோர் இணைந்து நடித்திருப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளதோடு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இந்தநிலையில், மஹான் படத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி வெளியிட இருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார்.

Exit mobile version