மலையகத்தில் அத்துமீறலை மேற்கொள்ளும் தரப்பொன்றையும் அதனை வேடிக்கை பார்க்கும் தரப்பொன்றையும் காண முடிவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
நுவரெலிய மாவட்ட பிரதேச செயலக விடயத்தில் மாவட்ட மக்களின் மனித உரிமை மீறப்பட்டதாக வலியுறுத்தி மலையக அரசியல் அரங்கத்தின் சார்பில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நுவரெலிய மாவட்ட பிரதேச செயலக விடயத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை மலையக அரசியல் அரங்கம் முன்னெடுத்து செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(இந்த கதையில் இன்னும் தெரிந்துக்கொள்ள வேண்டுமா)
