நாட்டில் மருந்து பொருட்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் மருந்து பொருள் இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.
டொலர் விலை அதிகரிப்புக்கு அமைவாக நியாயமான முறையில் விலை அதிகரிப்பை மேற்கொள்ள இறக்குமதியாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தட்டுப்பாடின்றி மருந்து பொருட்களை விநியோகிக்குமாறும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
