மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்த கர்தினால் மல்கம் ரஞ்சித்

4 years ago
Sri Lanka
(76 views)
aivarree.com

இலங்கையின் கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்லெட்டை சந்தித்துள்ளார்.

ஜெனீவாவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

ஈஸ்டர் குண்டு தாக்குதல் குறித்த விசாரணைகளில் அதிருப்தி கொண்டுள்ள அவர், அதுகுறித்து கடந்த தினம் பரிசுத்த பாப்பரசர் ஃப்ரான்ஸிஸை சந்தித்து முறையிட்டிருந்தார்.

அதன் பின்னர் ஜெனீவா சென்று மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்து இது குறித்து முறையிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.