அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான மெண்டிஸ் நிறுவனம் மதுபானம் உற்பத்தி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனம் செலுத்த வேண்டிய வரித்தொகையும் தாமத கட்டணமும் செலுத்தப்படாமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் செஹான் சேமசிங்க பாராளுமன்றில் வைத்து தெரிவித்தார்.
எனினும் வயம்ப டிஸ்ட்லெரிஸ் நிறுவனம் தமது வரி தொகையை செலுத்தியுள்ள நிலையில், அந்த நிறுவனம் தொடர்ந்தும் மதுபானம் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அரசாங்கம் வயம்ப டிஸ்ட்லெரிஸ் நிறுவனத்துக்கு தடை விதித்ததன் காரணமாக அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய 1 பில்லியன் வரி கிடைக்காமல் போனது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
