மட்டக்களப்பு – வடமுனை – ஊத்துச்சேனை பகுதியில் உள்ள வீரநகர் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
இதனால் 9 மாணவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பகல் உணவாக பாடசாலையில் வழங்கப்பட்ட சோறும், சோயாமீட் கறியும் ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளது.
6 ஆண் மாணவர்களும் 3 பெண் மாணவிகளும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிகந்தை வைத்தியசாலையை அய்வரி செய்திகள் குழு தொடர்பு கொண்டு கேட்டபோது, பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது தேறியுள்ளதாகவும், விரைவில் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
