தனது பதவியை இராஜினாமா செய்வதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அவரது மகன் இன்று காலை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் வரை தான் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
