போர்க்குற்ற ஆதாரம் திரட்டும் பொறிமுறை ஊடாக நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்பெறாது என்று இலங்கை அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் அறிவித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது மாநாட்டில் இலங்கை சார்பில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் உரையாற்றினார்.
இந்த பொறிமுறைக்கு தன்னார்வ நிதி பயன்படுத்தப்படுவதை தாம் எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த பொறிமுறையின் ஊடாக நாட்டில் சமாதானம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் ஐக்கியம் என்பன பாதிக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில், இலங்கையின் போர்க்குற்ற ஆதாரங்களை திரட்டுவதற்கான 12 பேர் கொண்ட குழுவை அமைக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
